12வது மாடியில் இருந்து விழுந்து 16 வயது சிறுமி உயிரிழப்பு!

பொரளையில் உள்ள, 24 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 12வது மாடியில் இருந்து விழுந்து, 16 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம்,  நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது

மாடியில் இருந்து விழுந்த சிறுமி மீட்கப்பட்டு, கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பொரளை-செர்பென்டைன் வீதியைச் சேர்ந்த, 16 வயது சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி சிறிது காலமாக மன அழுத்தத்திற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக, அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சிறுமி மாடியில் இருந்து வேண்டுமென்றே குதித்தாரா அல்லது தற்செயலாக விழுந்தாரா, என்பதை கண்டறிய பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்