
115வது நட்புறவு வெற்றிக்கிண்ண துடுப்பாட்ட போட்டி
-யாழ் நிருபர்-
வடக்கின் போர் என அழைக்கப்படும் இரு பிரபல கல்லூரிகளுக்கிடையில் நடாத்தப்படும் துடுப்பாட்ட போட்டி தொடர்பான ஊடக சந்திப்பு நேற்று யாழ். மத்திய கல்லூரியின் பிரதான மண்டவத்தில், யாழ். மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.கே. எழில்வேந்தன் மற்றும் யாழ். சென் ஜோன்ஸ் பரிவோன் கல்லூரி அதிபர் பி.துஸ்சிதரன் ஆகியோரினால் நடாத்தப்பட்டது.
அந்தவகையில் 115 ஆவது ஆண்டின் துடுப்பாட்ட போட்டிகள் எதிர்வரும் 07,08,09 திகதிகளிலே மத்திய கல்லூரி பிரதான விளையாட்டு அரங்கில் நடாத்துவதற்கு சகல ஒழுங்குகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்லூரியின் இரு அதிபர்களும் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களுக்கிடையில் நட்புறவு நல்லெண்ணக்கிண்ணத்தினை வலுப்படுத்தும் வகையில் இவ் துடுப்பாட்ட போட்டிகள் கடந்த காலங்களில் இடம்பெற்றது.
ஆனால் கடந்த ஒரு கொரோனா இடர் காரணமாக வருடம் இப்போட்டிகளை நடாத்த முடியவில்லை.
இந்த 115வது நட்புறவு வெற்றிக்கிண்ண துடுப்பாட்ட போட்டிக்கு இருகல்லூரி அதிபர்கள், மாணவர்கள், விளையாட்டினை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் எனப்பலரும் இதற்கு அனுசரணை வழங்குவர்கள் என அதிபர்கள் தெரிவித்தனர்.