100 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் பலத்த மழை பெய்யக்கூடும்
நாட்டின் பல பாகங்களில், இன்றைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, தென், மேல், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும். அம்பாறை மாவட்டத்திலும் இவ்வாறு மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், நாட்டின் பெரும்பாலான பாகங்களில், மாலை வேளையில், மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
எனவே, காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.