Sri Lanka Tamil News Site

10 மாவட்டங்களில் பலத்த மழை:அபாய எச்சரிக்கை

- Advertisement -

இலங்கையில் 10 மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் இன்று திங்கட்கிழமை அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மற்றும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அபாய எச்சரிக்கை நாளை செவ்வாய்க்கிழமை காலை 09.30 மணி வரை அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

- Advertisement -