
10 மணித்தியால மின்தடை இல்லை
அடுத்த வாரத்தில் மின் துண்டிப்பு நேரம் நீடிக்கப்படமாட்டாது என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
மின்னுற்பத்திக்கு தேவையான எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இன்று அறிவித்தார்.
இதனையடுத்து அடுத்த வாரம் மின் துண்டிப்பு நேரம் நீடிக்கப்பட மாட்டாது இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தற்போது ஆறரை மணித்தியாலங்களுக்கு அமுலாக்கப்படும் மின்தடை அடுத்த வாரத்தில் 10 மணித்தியாலங்களாக அதிகரிக்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.