10 இந்திய மீனவர்கள் காரைநகர் கடற்பரப்பில் கைது!

-யாழ் நிருபர்-

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மீன்பிடி படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் நேற்றிரவு யாழ்ப்பாணம் – காரைநகர், கோவளம் கலங்கரை விளக்கத்தில் நடத்திய விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீன்பிடி படகை கைப்பற்றியதுடன் 10 இந்திய மீனவர்களையும் கைது செய்தனர்.

வெளிநாட்டு மீன்பிடி படகுகளின் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளை கட்டுப்படுத்த கடற்படை மற்றும் கடலோர காவற்படையினர் இலங்கை கடற்பரப்பில் வழக்கமான ரோந்து மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி காரைநகர் கோவளம் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதைக் கண்டறிந்த கடற்படையினர், இந்திய மீன்பிடி படகுகளை கைப்பற்றினர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக சட்டநடவடிக்கைக்காக யாழ்.கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஓப்படைக்கப்படவுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்