Last updated on November 23rd, 2024 at 11:45 am

10ஆம் வகுப்பு சித்தியடையாத மாப்பிள்ளை வேண்டாம் : திருமணத்தை நிறுத்திய பட்டதாரி மணப்பெண் | Minnal 24 News %

10ஆம் வகுப்பு சித்தியடையாத மாப்பிள்ளை வேண்டாம் : திருமணத்தை நிறுத்திய பட்டதாரி மணப்பெண்

இந்தியா – உத்தரப்பிரதேசத்தில் மணமகன் தன்னைவிடக் குறைவாகப் படித்துள்ளதாகக் கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது.

சுல்தான்பூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 17 ஆம் திகதி 28 வயது பெண்ணுக்கும், 30 வயது இளைஞருக்குத் திருமணம் நடைபெற இருந்தது.

ஆனால் இறுதி நேரத்தில் அந்த இளைஞரைத் திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று மணப்பெண் மறுத்துள்ளார்.

மணமகள் பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில், மாப்பிள்ளை 10ஆம் வகுப்பு தோல்வியடைந்துள்ளார்.

இதனை காரணம் காட்டி 10ஆம் வகுப்பில் தோல்வியடைந்த மாப்பிள்ளையைத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று மணப்பெண் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து திருமணம் பாதியில் நின்றதால் வரதட்சணையாகக் கொடுக்கப்பட்ட நகை, பணம் ஆகியவற்றை மணப்பெண் குடும்பத்தினரிடம் மணமகன் குடும்பத்தினர் திரும்ப ஒப்படைத்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்