வெள்ளை நிறத்தில் பிறந்த எருமை கன்று

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் கரவுளியில் எருமை மாடு ஒன்று வெள்ளை நிறத்தில் கன்றொன்றை ஈன்றுள்ளது.

கரவுளி அருகே இருக்கும் மச்சானி கிராமத்தில் இந்த கன்று குட்டியைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ஆச்சரியத்துடன் திரும்பிச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இது இயற்கையின் அதிசயம் என்றும், உலகின் 8வது அதிசயம் என்றும் கூறிச் செல்கின்றனர்.

ஜூலை 17ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு எருமை மாடு கன்றுக் குட்டியை ஈன்றதாகவும், அப்போது வெள்ளை நிறத்தில் பிறந்த கன்றுக் குட்டியைப் பார்த்து தாங்கள் ஆச்சரியம் அடைந்ததாகவும் எருமையின் உரிமையாளர் தெரிவித்தார். மேலும், கன்றுக் குட்டி பிறந்ததில் இருந்து ஆரோக்கியமாக இருப்பதாகவும், அதன் தாய் தனது குட்டியை மிகவும் அரவணைத்துப் பார்த்துக் கொள்வதாகவும் கூறினார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்