வெள்ளைக் கோட்டில் வீதியைக் கடந்த குடும்ப சுகாதாரப் பணியாளர்களுக்கு நேர்ந்த கதி

வெள்ளை கோட்டின் ஊடாக வீதியைக் கடந்த குடும்ப சுகாதாரப் பணியாளர்கள் இருவரை தனியார் பேருந்து மோதியதில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

களுத்துறை சுகாதார மருத்துவ கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் இரண்டு குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு முன்பாக வெள்ளைக் கோட்டின் ஊடாக வீதியைக் கடக்க முயன்றபோதே கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்த இவர்களை மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.