வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணம் அனுப்பும் தொகை அதிகரிப்பு

2025 ஒக்டோபரில் இலங்கைக்கு 712 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து மொத்தமாக 6.52 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 20.1 சதவீத அதிகரிப்பு என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.