
வாளுடன் இளைஞர் கைது
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மட்டுவில் கண்ணன் கோவில் பகுதியில் நேற்று சனிக்கிழமை வாளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 21 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டுவில் பகுதியில் குழுவொன்று வாள்களுடன் வீதியில் நிற்பதாக சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற நிலையில் இளைஞரை வாளுடன் கைது செய்துள்ளனர்.
வாள்களுடன் நின்ற ஏனையவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில் சந்தேகநபரை கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
