வாகரையில் அடையாளம் காண முடியாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்கேணிக்கும் கிரிமிச்சை இடைப்பட்ட (கயூவத்தை) கடற்கரையில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மாங்கேணிக்கும் கிரிமிச்சைக்கும் இடைப்பட்ட  கடற்கரையில்  06/12 நேற்று சனிக்கிழமை பகல்  கரை  ஒதுங்கி அடையாளம் காணமுடியாமல் உள்ள நிலையில் ஆண் ஒருவரின் சடலம்  மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

சடலமானது கரை ஒதுங்கியதை கண்ட மக்கள் வாகரைப் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளதையடுத்து  பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் நேற்று மாலை வாகரை பொலிசாரினால் வாழைச்சேனை ஆதார  வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சடலத்தினை அடையாளம் காண உதவுமாறும் பொலிசார் மற்றும் தீடிர் மரண விசரன அதிகாரி பொது மக்களை கேட்டுக்கொள்கின்றார்கள்.