வாகன விபத்து: கல்லூரி மாணவர் உயிரிழப்பு

இந்தியாவில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபாத் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பிராங்கிளின் ( வயது 19 ) எனும் மாணவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவர் தலைக்கவசம் அணியாமல் மோட்டார்சைக்கிளில் சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காவேரிபக்கத்தில் இருந்து வாலாஜா நோக்கி சென்று கொண்டிருந்த போது முன்பு சென்ற லொறி பிரேக் பிடித்து நிறுத்தப்பட்ட நிலையில், மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அதில் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்