யாழில் கோர விபத்து

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – கச்சேரி நல்லூர் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கப் ரக வாகனம் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இவ்வாறு படுகாயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து சம்பவம் குறித்து யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.