முட்டையின் விலை அதிகரிப்பு!

சந்தையில் தற்போது முட்டை ஒன்று 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

நிலவிய அதிதீவிர வானிலையால் அதிகளவான கோழிகள் உயிரிழந்த நிலையில் கால்நடை வளர்ப்பு தற்போது பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாகவே, 25 ரூபாய் முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை, தற்போது 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சில இடங்களில் 50 ரூபாய்க்கும் முட்டை விற்பனை செய்யப்பட்டு வருவதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.