மீராவோடை பள்ளிவாசல் தாக்கப்பட்டு ஐந்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்-

‘வஹ்ஹாபிஸக் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபடுவோம்’    என்ற தொனிப்பொருளில் மஸ்ஜிதே செய்தினா முஹமத்(ஸல் ) மீராவோடை பள்ளிவாயல் தாக்கப்பட்டு ஐந்தாவது ஆண்டு நிறைவினை நினைவு கூறும் முகமாக கருப்பு வெள்ளி நாள் நினைவேந்தல் நிகழ்வு  நினைவு கூறப்பட்டது.

குறித்த நிகழ்வு கல்குடா மீராவோடை ஆலீம் வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதே செய்தினா முஹமத் பள்ளிவாயலில் நடைபெற்றது. 

இஸ்லாமிய கல்வி கலாச்சார நிலையத்தின் தலைவர் ஏ.எல்.மர்சூத் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மௌவி ஜே.அஸ்ரப்அலி ஆசிரியர் கலந்து கொண்டு விசேட உரையாற்றினார்.

துவா பிரார்தனை இடம்பெற்றதுடன் பள்ளிவாயல் தாக்கப்பட்டமை அதனால் ஏற்பட்ட சொத்து சேதம்,உயிர் ஆபத்து மற்றும் சந்தேக நபர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கை தொடர்பாக விசேட உரைகள் இடம்பெற்றதுடன் இனிமேலும் இவ்வாறதொரு சம்பவம் இடம்பெற வாய்பளிக்கக் கூடாது என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

செய்தினா முஹமத் பள்ளிவாயலானது ஷியா முஸ்லிம்களுக்களுக்குரிய வணக்கஸ்த்தலமாகும்.

இது கடந்த 2017.06.08 ஆம் திகதி அன்று குர் ஆன் மஜ்லிஸில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் மீது  கல்குடா வஹ்ஹாபிஸக் குண்டர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு பள்ளிவாயலும் உடைக்கப்பட்டதுடன் வணக்கத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் சிலர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த சம்பவத்தினை நினைவு கூறும் முகமாக வருடா வருடம் இவ் நிகழ்வு  செய்தினா முஹமத் பள்ளிவாயல் நிர்வாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் இறுதியில் இப்தார் நிகழ்வும் நடைபெற்றது.

இதில் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.