பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை பிரதேச செயலகத்தில் இடம் பெற்றுள்ளது.பெண்கள் மற்றும் மகளிர் சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுபடுத்தல் அமைச்சின் மகளிர் பணியகத்தினால் 10 பெண்தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக தலா ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன் தலைமையின் கீழ் வழங்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன், உதவி பிரதேச செயலாளர் யு.குமணன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.றியாத், நிருவாக உத்தியோகத்தர் ஜெயந்தி டெரிக், சமுர்த்தி முகாமையாளர் எஸ்.சிவகுமார், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் யு. சாய்சாதனி, கிராம அதிகாரி என்.ஜெயகாந்தன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.