பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்!
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று திங்கட்கிழமை தனது 87ஆவது வயதில் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இன்று காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அத்துடன் இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும் சரோஜா தேவி பெற்றுள்ளார். சரோஜா தேவியின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed