
பல இடங்களில் திருட்டு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கைது
கொழும்பு பகுதியில் 21 இலட்சம் பெறுமதியான திருட்டுப் பொருட்களுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாரகொட வீதி, அங்கொடை மற்றும் வெலிஹிந்த கடுவெல ஆகிய இடங்களில் வசிக்கும் 36, 32 மற்றும் 29 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் அதுருகிரிய, கடவத்தை, தலங்கம, கடுவெல, பொலிஸ் பிரிவுகளில் 18 இடங்களில் பொருட்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளதுடன், இவர்களுக்கு நீதிமன்றங்களில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டு மூவரையும் கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக அதுருகிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
