படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் உயிரிழப்பு

இந்தியாவில் புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகத்தில், படகில் இருந்து தவறி விழுந்த மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தேங்காய்திட்டுப் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி ( வயது 63 ) எனும் மீனவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது படகில் டீசல் நிரப்பிக்கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசி படகு ஆடியதால், நிலைதடுமாறு கடலில் விழுந்ததாகவும், அப்போது படகில் இருந்த மீன்பிடி வலைகள் சரிந்து அவர் மீது விழுந்ததால் மேலே வர முடியாமல் மூழ்கியபோது படகில் இருந்த அவரது மகனும், சக மீனவர்களும் அவரை மீட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் குறித்த நபரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மூச்சு திணறி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்