நோயால் பீடிக்கப்பட்ட ட்ரம்ப்
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கால்களில் வீக்கம் ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு சமீபத்தில் நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டதாக வெள்ளை மாளிகை அறிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட், செய்தியாளர்களிடம் கூறுகையில், ட்ரம்ப் சமீபத்தில் கால்களில் ஏற்பட்ட வீக்கத்தை ஆராய சோதனைகளை மேற்கொண்டார்.
இந்த நிலை, கால்களில் இருந்து இதயத்திற்கு இரத்தம் திரும்பாததால் ஏற்படுகிறது.
இது நரம்பு பற்றாக்குறையின் சிக்கல்களாக இருக்கலாம் என்றும் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.
மேலும் இதய செயலிழப்பு, சிறுநீரக பாதிப்பு ஆகிய நோய்க்கான அறிகுறிகள் எதுவும் அடையாளம் காணப்படவில்லை என்று அவர் கூறினார்.
ஜனாதிபதி உடல்நலத்துடன் இருப்பதாகவும், எந்த கவலையும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.