நான்கு கிலோமீட்டர் தூரம் காபட் இடும் பணி ஆரம்பம்

-மஸ்கெலியா நிருபர்-

50 கோடி ரூபாய் செலவில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் ஹட்டன் நல்லதண்ணி பிரதான வீதியில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலை சந்தியில் இருந்து மவுஸ்சாகலை சந்தி வரை உள்ள பிரதான சாலை காபட் இடும் பணி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 க்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

வைபவ ரீதியாக இன்று ஆரம்பித்த இந்த 4 கிலோமீட்டர் தூரம் காபட் இடும் பணி எதிர் வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி நிறைவு பெற்று மக்கள் பாவனைக்கு திறந்து விடபட உள்ளது என மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் எமது அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டாவது பாதீட்டில் பெருந்தோட்ட மக்களின் வேதனம் 400/= ரூபாவால் உயர்தபட்டு உள்ளது.அடிப்படை சம்பளம் 1550/= ரூபாய் மேலதிக அரசாங்கம் 200/= கொடுப்பணவுடன் 1750/ரூபாய் எனவும் பெருந்தோட்ட மக்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்களும் நாட்டின் உற்பத்தியை பெருக்கி நாட்டிற்கு அந்நிய செலாவணி பெற்று கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டு எமது அரசாங்கத்தை பல படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை உயர் அதிகாரிகள் மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் நகர வர்த்தகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.