துப்பாக்கிச் சூடு

கிரிபத்கொடையில் உள்ள இரவு விடுதி ஒன்றில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

கால சந்தி பகுதியில் அமைந்துள்ள குறித்த விடுதியில் 6 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் கிரிபத்கொடை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.