சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

பெலியத்த, ஹட்போதிய பிரதேசத்தில் பழைய வீடொன்றை இடிக்க முற்பட்ட போது அதன் சுவர் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெலியத்த ஹத்போதிய ஏகமுத்து மாவத்தையில் வசித்து வந்த ரஞ்சித் கங்கணம் ஆச்சாரி (வயது – 47) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உறவினர் ஒருவரின் பழைய வீட்டின் சுவர்களை இடிப்பதற்காக தனது மகனுடன் சென்ற அவர், சுவர் ஒன்றில் இருந்து கதவு கைப்பிடியை அகற்ற முற்பட்ட போது, ​​திடீரென சுவர் இடிந்து விழுந்து அதன் அடியில் புதையுண்டு உயிரிழந்துள்ளார்.

சடலம் மீதான பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.