
சிறையிலிருந்து தப்பிய இருவர் கைது
சிறைச்சாலையில் இருந்து தப்பிச்சென்ற கைதிகள் மீண்டும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 30 மற்றும் 32 வயதுடைய இளைஞர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அகுனுகொலபலஸ்ஸ சிறைச்சாலையில் இருந்து அகுனுகொலபலஸ்ஸ வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்று தனமல்வில பிரதேசத்தில் உள்ள வாடி ஒன்றில் பதுங்கியிருந்த கைதிகள் இருவரை தனமல்வில பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் கொள்ளை, கைக்குண்டுகளை வைத்திருந்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
