
சட்ட விரோதமாக மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவர் கைது!
-மஸ்கெலியா நிருபர்-
சட்ட விரோதமாக மாணிக்க கற்கள் அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவரை மஸ்கெலியா பொலிசார் கைது செய்து உள்ளனர்.
இச் சம்பவம் கடந்த சனிக்கிழமை மாலை இடம் பெற்று உள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 45 வயது 52 வயது உடைய மவுஸ்சாகலை தோட்ட சீட்டன் பிரிவை சேர்ந்தவர்கள் என தெரிய வருகின்றது.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் எஸ் புஷ்பகுமாரவுக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை தொடர்ந்து அவரது பணிப்புரையின் படி மஸ்கெலியா பொலிஸார் திடீர் சுற்றி வளைப்பு ஒன்றை மவுசாகலை ஓயா பகுதியில் மேற்கொண்டனர்.
அந்த சுற்றி வளைப்பின் போது மவுஸ்சாகலை தோட்ட சீட்டன் பிரிவில் உள்ள இருவர் மாணிக்க கற்கள் அகழ்வுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டு எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
