குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள எரிசக்தி அமைச்சர்

குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள எரிசக்தி அமைச்சர்

இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயின் தரம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) சட்ட ரீதியாக பதிலளிக்கும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்  தலைவர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சட்டரீதியாக பதிலளிக்கும் என அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெய் போதுமான அளவு கையிருப்பு உள்ளது என அமைச்சர் ட்விட்டரில் ஒரு செய்தியில் தெரிவித்துள்ளார்.

‘லக்ஷபான நீர் மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு, டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெய்க்கு போதிய நிதி இல்லை, ஆகிய காரணங்களால் இலங்கை மின்சார சபையால் நீட்டிக்கப்பட்ட மின்வெட்டு கோரப்பட்டது’, என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது ஜனக ரத்நாயக்க, புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் கையிருப்பில் தவறான வகை நாப்தா திரவம் உள்ளதாக தெரிவித்தார்.

‘புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெயில் உள்ள நாப்தாவில் அதிக அளவு கந்தகம் உள்ளது,அதை மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் தயாரிக்க பயன்படுத்த முடியாது’ என்று அவர் விளக்கினார்.

புதிய கையிருப்பு கச்சா எண்ணெய் CPC யினால் இறக்குமதி செய்யப்பட்டதாகத் தெரிவித்த ஜனக ரத்னாயக்க, அதனால் எந்தப் பயனும் இல்லை என்பதால் அதனை இப்போது தான் குடிக்க முடியும், என்றும் தெரிவித்தார்.

மேலதிக செய்திகளுக்கு:-  Minna24news

இவற்றையும் பார்வையிடலாம் :- தவறான இறக்குமதியால் மின்தடை அதிகரிப்பு