எல்லை தாண்டி வந்த இந்திய மீனவர்கள் கைது

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – கோவளம் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் இன்றையதினம் திங்கட்கிழமை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

இதன்போது பயன்படுத்தப்பட்ட படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணைகளின் பின்னர் அவர்கள் நாளையதினம் செவ்வாய் கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.