எமது வட்டி விகிதங்களுக்கு உடன்படாவிட்டால் அனைத்து நிதி நிறுவனங்களும் பூட்டப்படும்

மத்திய வங்கியின் நிபந்தனைகளுக்குட்பட்டு மக்களின் நலன் கருதி , வருட வட்டி 18 வீதமாகவும் , மாத வட்டி 3 வீதமாக இருக்க வேண்டும், இல்லாவிடின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து நிதி நிறுவனங்களும் மக்கள் நலன் கருதி, உரிய சட்ட திட்டங்களுக்கு அமைவாக பூட்டப்படும், என தவிசாளர் வினோராஜ் தெரிவித்துள்ளார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட நுண் கடன் நிறுவனங்கள், நிதி நிறுவனங்களின் முகாமையாளர்களுடனான கலந்துரையாடல் , மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இதன்போதே தவிசாளர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.