இலங்கைக்கு அவுஸ்திரேலியா ரூபா 1.5 மில்லியன் டொலர் பங்களிப்பு!

 

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் (WFP) இலங்கையில் ஏற்பட்ட டிட்வா சூறாவளிக்கு பதிலளிக்கும் விதமாக தனது அவசர நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் 1.5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் (AUD) பங்களிப்பு ஆதரவளிக்கிறது.

இந்த நிதியுதவியானது, அனர்த்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உயிர்காக்கும் வலுவூட்டப்பட்ட உணவு (Fortified food) மற்றும் பண உதவி ஆகியவற்றை வழங்க உதவுகிறது.

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் மனிதாபிமான மையமான டுபாயிலிருந்து வலுவூட்டப்பட்ட பிஸ்கட்டுகளின் முதல் விமானப் போக்குவரத்து ஏற்கனவே இலங்கையை வந்தடைந்துள்ளது.

மேலும், எதிர்வரும் நாட்களில் 67 மெட்ரிக் தொன்கள் வரை எதிர்பார்க்கப்படுகிறது.

ஆரம்பகட்ட வலுவூட்டப்பட்ட பிஸ்கட் விநியோகங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான நுவரெலியா மற்றும் கேகாலைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அத்துடன் பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களுக்கும் மேலதிக விநியோகங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

“இந்த அழிவுகரமான நேரத்தில் அவுஸ்திரேலியா இலங்கையுடன் துணை நிற்கிறது,” என்று இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மத்தியூ டக்வொர்த் தெரிவித்தார்.

உணவுப் பொருட்கள் தவிர, அவுஸ்திரேலியாவின் பங்களிப்பு பண அடிப்படையிலான உதவிகளுக்கும் ஆதரவளிக்கும்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், மீட்டெடுப்பைத் தொடங்கவும் இது தேசிய முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருக்கும்.