அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து!

தற்போது அமெரிக்க அரசாங்கம் இடைநிறுத்தப்பட்ட (shutdown) நிலையில் உள்ள காரணமாக விமான போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி 5,000 விமானங்கள் ரத்து அல்லது தாமதமாக புறப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் விமானப் போக்குவரத்து நிறுத்தம் காரணமாக, அந்நாட்டின் 40 முக்கிய விமான நிலையங்களின் செயல்பாடுகள் 10 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

நேற்றைய நிலவரப்படி ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலை தொடர்ந்தால் விமானங்கள் 20 சதவீதம் ரத்து செய்யப்படலாம் என அமெரிக்க போக்குவரத்து செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.