
அனுமதியற்ற கட்டடத் தொகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு முகத்துவாரம் கஜிமாவத்தை பகுதியில் அமைந்துள்ள அனுமதியற்ற கட்டடத்தொகுதியில் இன்று இரவு 7.30 அளவில் தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 தீயணைப்பு வாகனங்கள் குறித்த பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இதன்போது, அந்த பகுதியில் உள்ள 25 வீடுகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
