அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள் வருகை
இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 61,890 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நவம்பரில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளில் சுமார் 25.1 சதவீதம் பேர் இந்தியாவிலிருந்து (15,541) வந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து 8,220 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 4,740 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,450 சுற்றுலாப் பயணிகளும், பிரான்சிலிருந்து 2,614 சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளனர்.
இந்தநிலையில் இந்த ஆண்டு நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,952,577 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில், இந்தியாவிலிருந்து 438,946 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 179,277 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 141,860 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 121,481 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 114,547 சுற்றுலாப் பயணிகளும் வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
