𝗦𝗣𝗔𝗡𝗗அமைப்பினரால் ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தைப்பொங்கல் நிகழ்வு
- Advertisement -
உழவர் நாளாம் தைத்திருநாளினை முன்னிட்டு அபிவிருத்திக்கான சமூக முயற்சியாளர்களின் வலையமைப்பினால் (𝗦𝗣𝗔𝗡𝗗) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தைப்பொங்கல் நிகழ்வானது அம்பாறை மத்திய முகாம், 11ம் கிராமத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக, கலை கலாச்சார உத்தியோகஸ்தர், வளைகுடா வானம்பாடிகள் அமைப்பு சார்பாக பிரதீபன், அம்பாரை மாவட்ட பொறுப்பாளர் ம. புலேந்திரன், வாழ்வாதார பணிப்பொறுப்பாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
- Advertisement -
இதன் போது, பாரம்பரியத்தை நினைவூட்டும் முகமாக பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றிருந்தது, மேலும் அறநெறி பாடசாலை மாணவர்களுக்குப் பாடப்புத்தகம் வழங்கியதுடன், போட்டியில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
- Advertisement -