ஹெரோயின் போதைப் பொருளுடன் 9 பேர் கைது

-யாழ் நிருபர்-

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற சுற்றிவளைப்பில் 7 பேரும் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுதுமலை பகுதியை சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் 5 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயினுடனும், ஏனையோர் 2 கிராம் 950 மில்லிகிராம் ஹெரோயினுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தமாக 8 கிராம் 750 மில்லிகிராம் ஹெரோயின்  கைப்பற்றப்பட்டுள்ளது.

இவர்களை மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.