
ஹீரோவாக களமிறங்கும் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்: ஹீரோயின் யார் தெரியுமா?
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர் விஜய். 1984 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் விஜய். தற்போது கதாநாயகனாக 66 படங்கள் நடித்துள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் தகவல் படி இந்தியாவில் 100 பிரலங்கள் பட்டியலில் 7 முறை இடம் பிடித்தவர்.அதோடு இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.அவரது மகன் ஜேசன் சஞ்சய். இவரும் இப்போது திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் திரையுலகில் பிரபலமாக இருந்த நடிகை தேவயானியின் மகள் இனியா சஞ்சய்-க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இவர்கள் நடிக்க இருக்கும் திரைப்படம் கடந்த 1999 ஆம் ஆண்டு தேவயானியின் கணவர் ராஜகுமாரின் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான “நீ வருவாய் என” என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாக தயாராக உள்ளது.
இந்த திரைப்படத்தில் தேவயானி கதாநாயகியாக நடித்திருப்பார். அந்த படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் சஞ்சய் நடிக்கும் படமாக தயாரிக்கப்படவுள்ளது.
சஞ்சய் கனடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழக்தில் படித்தவர். நடிக்க வர வேண்டும் என்ற நோக்கில் சஞ்சய் அவரது தந்தை விஜயை கூர்ந்து கவனித்து வந்துள்ளார்.இவருக்கு டைரக்சனில் ஆர்வமாக இருக்கும் நிலையில், இப்போது நடிப்பிலும் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இவர் இப்போது ஒரு குறும்படம் ஒன்றை இயக்கி வருகிறார். விரைவில் அந்தப் படம் வெளியாக உள்ளது.
விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தை இயக்கிற வம்சி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஏற்கனவே சஞ்சய் நடிப்பில் ஆர்வமாக இருப்பதாகவும், விரைவில் நடிக்க வருவார் என்றும் கூறியிருந்தார்.அதனடிப்படையில் தென்னிந்தியாவின் முன்னணி இயக்குநர்கள் பலர் சஞ்சயை வைத்து படம் இயக்க விருப்பம் உள்ளதாக முன்வந்தனர். ஆனால் தனது மகன் இன்னும் தயாராகவில்லை என விஜய் தவிர்த்து வந்தார்.இந்நிலையில் சஞ்சய் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் எப்படி வெற்றிகரமான லாபகரமான நடிகராக இருக்கிறாரோ அதே போல் அவரின் வாரிசு சஞ்சயும் வெற்றிகரமான நடிகராக வலம் வருவார் என இயக்குநர்களும் ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் .
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்