ஹிக்கடுவையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் உயிரிழப்பு!

ஹிக்கடுவை – குமாரகந்த பகுதியில் இன்று வியாழக்கிழமை இரவு 7.00 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது

மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால், குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இத்துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார் .

51 வயதுடைய ஆணொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க