ஹாலிஎல வெலிமடை பிரதான வீதியில் மண்சரிவு அபாயம் : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

-பதுளை நிருபர்-

ஹாலிஎல வெலிமடை பிரதான வீதியின் 100 ஆவது மைல் கல்லுக்கு அருகில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பதுளை நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பதுளை மாவட்டத்தில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடும் என்பதால் வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மற்றும் பொது மக்களை பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு, பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது

மண் சரிவு ஏற்பட்டால் அதை அகற்றுவதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும், என பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் திரு.ஈ.எல்.எம்.உதயகுமார தெரிவித்தார்.