
ஸ்ரேயா கோஷல் ரசிகர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!
இந்தியாவின் பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் தள பக்கம் ஹேக் (Hack) செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி முதல் தனது எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதில் கடந்த பெப்ரவரி 13 ஆம் திகதி முதல் எனது எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை எனது ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்” எனப் பதிவிட்டிருந்தார்.
மேலும், தனது கணக்கில் பதிவிடப்படும் எந்தவொரு பதிவு, கருத்து, செய்தி அல்லது அறிவிப்புக்கும் யாரும் பதிலளிக்க வேண்டாம் என ஸ்ரேயா கோஷல் தெரிவித்துள்ளார்.
தனது கணக்கு மீட்டெடுக்கப்பட்டதும், அதைப் பற்றி ஒரு காணொளி மூலம் மக்களுக்குத் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.