ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்பத் தயார்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவரும், பொதுச்செயலாளரும் பதவி விலகினால் கட்சியைக் கட்டி யெழுப்ப தயார என இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட போஷகர் பதவியில் நான் நீடிக்கின்றேன். என்னை எவரும் பதவி நீக்கம் செய்ய முடியாது. கட்சியில் உள்ள கள்வர்களை விரட்டினால், கட்சியைக் கட்டியெழுப்ப நான் தயார். தற்போதைய தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் ஆகியோர் கட்டாயம் பதவி விலக வேண்டும்  என்றார்.

இதேவேளை, தற்போதைய அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத நிலையில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.