வைத்தியர் போல் நடித்து வைத்தியசாலைக்குள் நுழைய முயன்றவர் கைது

குருநாகல் போதனா வைத்தியசாலைக்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வைத்தியர் போல் தோளில் ஸ்டெடஸ்கொப்புடன் நுழைய முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துஹெர ஹந்துகல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் களனி பல்கலைக்கழகத்தின் ராகம மருத்துவ பீடத்தின் அடையாள அட்டை காணப்பட்டதுடன், ஸ்டெடஸ்கொப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்