வைத்தியர்களுக்கு வேலைக்குச் செல்வதில் சிக்கல்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வைத்தியர்கள் தங்கள் தனியார் வாகனங்களில் வைத்தியசாலைகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறையினால் வைத்தியர்களுக்கு வேலைக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விசேட வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆகவே, விசேட வைத்தியர்களின் வாகனங்களுக்கு எவ்வித பிரச்சினையுமின்றி எரிபொருளை பெற்றுக்கொள்ளும் முறைமையொன்று வகுக்கப்பட வேண்டுமென அதன் தலைவர் டாக்டர் லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்தார்