வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகள்

மழையுடனான வானிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, மல்வத்து ஓயாவின் தாழ் நிலப்பகுதியை அண்மித்த வெங்கலசெட்டிகுளம், மடு, முசலி மற்றும் நானாட்டான் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு இவ்வாறு வெள்ளப் பெருக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஹா ஓயா, ஏறாவூர்பற்று மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முந்தெனி ஆற்றுக்கு அருகில் வசிக்கும் மக்கள் வெள்ள அபாயம் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திம்புலாகல, எச்சிலம்பட்டை, ஹிங்குராங்கொட, கந்தளாய், கிண்ணியா, கோறளைப்பற்று வடக்கு, லங்காபுர, மெதிரிகிரிய, மூதூர், சேருவில, தாமன்கடுவ, தம்பலகாமம், வெலிகந்த ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் மகாவலி ஆற்றுக்கு அருகில் வசிப்பவர்கள் வெள்ள அபாயம் குறித்து அவதானமாகச் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Minnal24 FM