வெளிநாட்டு பணம் அனுப்பும் வீதம் அதிகரிப்பு

மார்ச் மாதத்தில் வெளிநாட்டு பணியாளர்களின் பணம் அனுப்பும் வீதம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதற்கமைய கடந்த மார்ச் மாதத்தில்வெளிநாட்டு பணம் அனுப்பல்  693.3 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 18 சதவீதம் அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டு பணம் அனுப்பல் 572.4 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க