வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 23 வயது இளைஞன் சம்மாந்துறை பொலிஸாரினால் கைது!

 

-சம்மாந்துறை நிருபர்-

வெளிநாட்டு சிகரெட்டுகளை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபரை, சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.20 மணியளவில் நடைபெறவுள்ளது.

அம்பாறை மாவட்டம்-சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைகாட்டி பிரதேசத்தில், நேற்று இரவு 08.20 மணியளவில், சம்மாந்துறை சுற்றுச்சூழல் பிரிவு அதிகாரிகளினால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்மாந்துறை சுற்றுச்சூழல் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, மலையடிக்கிராமம் 02 பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதான சந்தேக நபரிடமிருந்து ஒருதொகை வெளிநாட்டு சிகரெட்டுகள் மீட்கப்பட்டிருந்ததுடன், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், குறித்த கைது நடவடிக்கையானது, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலதின் வழிகாட்டுதலில், பொலிஸ் நிலைய சுற்றுச்சூழல் பிரிவு பொறுப்பதிகாரி நஸார் தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர் பாரூக் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்