வெளிநாட்டிலிருந்து வந்து காணி விற்றவரின் பணம் கொள்ளை : சந்தேக நபர்கள் கைது!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் காணியை விற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜையின் 1 கோடியே 3 லட்சம் ரூபாய் பணம் I iPhone 14 PROMAX கைத்தொலைபேசி, மற்றும் கடவுச்சீட்டு என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரியின் கீழுள்ள பொலிஸ் குழுவினர் ஊரெழு பகுதியில் வைத்து, இன்று வியாழக்கிழமை குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சண்டிலிப்பாய் பகுதியில் வைத்து இந்த இந்த துணிகர சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர்.

Shanakiya Rasaputhiran

பணத்தை பறி கொடுத்தவர் சேந்தாங்குளம் பகுதியில் காணியை விற்றுவிட்டு தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேகநபர்களையும் சான்று பொருட்களையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டிலிருந்து வந்து காணி விற்றவரின் பணம் கொள்ளை!

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

Poineer Hospital Owner
Jana Uncle Post Ad