வெற்றிலையை மென்று பொது இடங்களில் துப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பதுளை பகுதியில்  வெற்றிலையை மென்று துப்புவது அல்லது பொது கட்டிடங்களில் உள்ள சுவர்களில்  சுண்ணாம்பு பூசுவது போன்ற செயல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க பதுளை மாநகர சபையின் சுகாதார திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அண்மைக்காலங்களில் சோதனையின் போது, ​​பொது சுகாதார பரிசோதகர்கள் 20 நபர்களை கைது செய்துள்ள நிலையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் அதிகமானோர் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பிரதான பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்காக காத்திருந்த பயணிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தொடர்ந்தும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.