வெருகலில் புலிகள் கட்சியின் பிரச்சாரம்

-மூதூர் நிருபர்-

சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரம சிங்கவை ஆதரித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் திருகோணமலை, வெருகல் -பூநகரில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

இதன் போது கிராம மக்களால் சிவநேசத்துறை சந்திரகாந்தன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசத்துறை சந்திரகாந்தன் உரையாற்றுகையில்

உரம்,பெற்றோல்,அத்தியவசிய பொருட்கள் தட்டுப்பாடு நிலவி போது ஆட்சிப் பொறுப்பை எடுத்து இரண்டு வருடத்திற்குள் ரணில் விக்கிரம சிங்க தீர்த்து தந்தார்.கிழக்கு மாகாணத்தை சுற்றுலா,மீன்பிடி,விவசாயம் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்த்து தந்தார்.

நாம் இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 2400 மில்லியன் ரூபாய்க்கு வேலை செய்திருக்கின்றோம்.தற்போது தேர்தல் காலத்தில் 40 கோடிக்கு மேல் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்திருக்கின்றேன்.இத்தேர்தலில் ரணில் விக்ரம் சிங்க் வெற்றி பெற்ற பின்னர் இதைவிட அதிகமான வேலைகளை நாங்கள் செய்வோம் என தெரிவித்தார்

எங்களை போராட்டத்திற்கு கொண்டு சென்ற கட்சி எமது மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.அநுரகுமார கட்சி துவேசமான கட்சி,மொட்டை பற்றி கதைக்கத் தேவையில்லை.

சிங்கள தலைவர்களையும், முஸ்லிம்களையும் வைத்து கிழக்கு மாகாணத்தை கைப்பற்றுவோம்.சரியாக திட்டமிட்டு அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவர்களாக நாம் மாற வேண்டும்.

ரணில்வென்றால் நாங்கள் வெல்வோம்.நாங்கள் தான் அகப்பை பிடிப்போம்.இல்லா விட்டால் அகப்பை வேரொரு தரப்புக்கு போய்விடும்.

ஜே.வி.பி இன்று என்.பி.பி என்று பெயர் மாற்றி வேசம் போட்டு வந்துள்ளனர்.தற்போது அருணை போட்டுள்ளார்கள்.அவரையும் துரத்தி அடிப்பார்கள்.அவர்கள் துவேசமான கட்சியினர் எனவும் தெரிவித்தார். மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்