வெதுப்பக உணவுப் பொருட்களின் விலை குறையுமா?

பாண் மற்றும் வெதுப்பக உற்பத்தி உணவுப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மூலப் பொருட்களின் விலை அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம் என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே. ஜயவர்தன சுட்டி காட்டினார்.

மேலும் எரிவாயு விலையை குறைப்பதால் மட்டும், வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்