வெடிமருந்து நிரப்பி சுடக்கூடிய துப்பாக்கியுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்-

லுணுகலை பல்லேகிருவ பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து நிரப்பி சுடக்கூடிய துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்

64 வயதுடைய எல்வத்த பல்லேகிருவ லுணுகலை பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்

லுணுகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி க்கு. கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாயின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் குழு ஒன்று குறித்த பகுதிக்கு விரைந்து சோதனை மேற்கொண்ட போது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூரில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து நிரப்பி சுடக்கூடிய துப்பாக்கியை கைப்பற்றியுள்ளனர்

சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இன்றைய தினம் வியாழக்கிழமை பசறை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபரை முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க